அன்புடையீர், கடந்த 16 மாதங்களாக நடைமுறையிலிருந்த நாடளாவிய குரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.  எனவே, அன்னை பூபதி கலைக்கூடமும் எமது வழமையான கல்வி நடவடிக்கைகளை மீண்டும் முழுமையாக நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, எதிர்வரும் 23.10.21 தொடக்கம், அறிவியல்கல்வி வகுப்புகளும் பகல் 12 முதல் 13 மணிவரை வாராவாரம் சனிக்கிழமைகளில் மீண்டும் நடாத்தவுள்ளோம்.

பெற்றோர்களினால் நடாத்தப்படும் உணவுச்சாலையும் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் நடாத்தப்படவுள்ளது என்பதையும மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!

பெற்றோர்களை பாடசாலை நடவடிக்கைகளில்  முன்பு போல் நேரடியாக சமூகமளித்து, கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி!😊

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்