12 மணி முதல் 13 மணிவரையிலான அறிவியல் பாடநேரத்தின்போது 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கல்வியுடன் சேர்ந்த விடயங்களே கற்பிக்கப்படும். இதில் விளையாட்டுடன் கூடிய வகையிலும் தமிழ்க்கல்வி கற்கும் முறைகள் கையாளப்படும். ஆரம்பக்கல்வி மாணவர்களின் தமிழ் மொழித்திறனை அதிகரிக்க வைக்கும்  ஒரு முயற்சியாக இவ்வருட அரையாண்டிற்கு இச்செயல் திட்டம் நடாத்தப்படும்.