பெற்றோர்களுக்கு வணக்கம்!

நாங்கள் எல்லோரும் அறிகின்றபடி பேர்கனிலும் மற்றைய இடங்களிலும் தொற்று கூடிக்கொண்டே செல்கிறது. அதனால் நாம் இன்னும் அவதானமாக இருப்போம்.

பாடசாலையில் ஆசிரியர்கள்/ பொறுப்பாளர்கள் 2 மீற்றர் இடைவெளியைப் பேணும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் 2  மீற்றர் இடைவெளியைத் தொடர்ந்து பேணுங்கள்.

இயலுமானவரை பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசிப்பதைத்  தவிர்க்கவும்.

பாடசாலை முடிந்தவுடன் நீங்கள் பிள்ளைகளைக் கூட்டவரும்போது, வாகனத் தரிப்பிடத்தில் சில சிரமங்கள் இருப்பதை நாம் அறிவோம்.  இவ்விடத்தில் எல்லோரும் ஒரு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, karantene/ isolering விதிமுறைகளைச் சரியான முறையில் பேணும்படியும் நினைவூட்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, ஏற்கனவே அறிவித்திருந்த " பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்" என்ற தகவலைப் பார்வையிடவும்.

நன்றி!
சுகந்தன் (அன்னை பூபதி, பேர்கன்)