அனைவர்க்கும் அன்பு வணக்கம்!

கடந்த சில நாட்களாக பேர்கன் நகரில் Covid 19 பரவுகை அதிகமாகியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அகில நோர்வே ரீதியிலும் நோய் பரவுகை அதிகரித்துவருவதால், அரசுமட்டத்திலும், பேர்கன் நகரசபைமட்டத்திலும் இப்பரவுகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக, நாமும் இந்த சனிதொடக்கம் (7-11-20) அடுத்துவரும்வாரங்களில் அன்னை பூபதி கல்விக்கூடத்தின் கல்வி நடவடிக்கைகளை zoom தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.

வகுப்பு ஆசிரியர்கள் viber குழுக்களூடாக உங்களுடன் தொடர்பு கொண்டு, நேரவிபரங்களைஅறியத் தருவார்கள்.

அத்துடன், நிலைமை கருதி ஓவிய, உறுப்பெழுத்து, பேச்சுப் போட்டிகளையும் அடுத்த வருடத்திற்கு பிற்போட்டுள்ளோம்.  தயவு செய்து எல்லோரும் அரச சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, குரோனா நோய்ப்பரவுகையைக் கட்டப்படுத்துவதில் எம் பங்களிப்பைச் செவ்வனே செய்வோம்.

நலம் காக்க! நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
04-11-20