அன்புடையீர், வணக்கம்!
zoom வழி நடைபெறும் அன்னை பூபதி கல்வி நடவடிக்கைகள் நேரடியாக பாடசாலையில் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வி நம்மவரில் பலருக்கு உள்ளது. குரோனா சூழ்நிலை பேர்கன் நகரில் ஓரளவுக்கு சீராக இருப்பதால், எதிர்வரும் vinterferieவின்பின் பாடசாலையை ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் நாம் உள்ளோம்.  ஆனாலும், இன்றைய சிக்கலான Oslo குரோனா சூழ்நிலை Bergenஇலும் வருமிடத்து எமது முடிவில் மாற்றம் ஏற்படலாம். எப்படியிருப்பினும், நேரடியாக பாடசாலை ஆரம்பித்தல் சம்பந்தமான மேலதிக விபரங்களை மாசிமாத நடுப்பகுதியில் தங்களுக்கு அறியத்தருகிறோம். அதுவரை அனைவரும் கவனமாயிருந்து, நலம் பேணுவோம்!
நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்