அனைவர்க்கும் அன்பு வணக்கம்!

கோடைகால விடுமுறை உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும என நம்புகிறோம். புதிய கல்வியாண்டில் புதிய பாட நூல்களுடன், பாடத்திட்டங்களுடன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் நேரில் காண மிக ஆவலாயுள்ளோம்.

வருகின்ற சனிக்கிழமை 21.8.21, காலை 10 மணிக்கு எமது அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் தனது கல்வியல் நடவடிக்கைகளை, நேரடியாக Aurdalslia பாடசாலையில் ஆரம்பிக்கிறது என்பதை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!

ஆசிரியர் கூட்டம் காரணமாக, பாடசாலை இந்த சனிக்கிழமை 11.30 மணிக்கு நிறைவடையும்!

Videregående skole மாணவர்களையும் காலை 10 மணிக்கே சமூகமளிக்குமாறு வேண்டுகிறோம்.

மாணவர்கள் தமது தமிழ் பாடநூல்களை வாங்குவதற்கு ஆயத்தமாக வருமாறு பெற்றோரை வேண்டிக்கொள்கிறோம்!

குரோனா பரவுகைக்கான ஆபத்தை நினவில் கொண்டு, அதற்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்!

நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்