அனைத்துலகத் தமிழ் தேர்வு நடைபெறும் இடம் : Skranevatnet skole , Sandsli vegen 98, 5254 Sandsli .
வழமை போல் மணி 09:30 க்கு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகும்.

9 ஆம் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களைத் தவிர்ந்த மற்றைய அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை விடுமுறை .
 
விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் புதன்கிழமை (1.mai) மணி 17:00 - 18:00 வரை  Fyllingsdalen bane வில் (ved Oasen) நடைபெறும். 1-10 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- நன்றி இல்ல பொறுப்பாளர்கள்.
 

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை என்ற கிராமங்களில் வாழும் வறுமை நிலையிலுள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான பொருளாதார உதவிக்கான திட்டம். இத் திட்டத்திற்கான எம்மால் மேற்கொள்ளப்படும் சிற்றுண்டி விற்பனைக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம்: 27.04.2019 சனிக்கிழமை
நேரம்: 11 மணி
இடம்: அன்னை பூபதி கலைக்கூடம்.

9 ம் வகுப்பு மாணவர்கள்,

அன்னை பூபதி தாயின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 27.04.2019 சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு எமது பாடசாலையில் சிறு நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 9.30 - 11.00 மணிவரை வழமையான தமிழ் வகுப்புகளும் அதைத்தொடர்ந்து அன்னை பூபதி நிகழ்வுகளும் நடைபெறும்.  அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் 30.05.19 (வியாழக்கிழமை)  "Skansemyren bane" வில் நடைபெறவிருக்கின்றது. விளையாட்டுக்கள் காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். இந் நிகழ்வு பாடசாலையின் ஒரு கட்டாய நிகழ்வாக அமைகின்றது.  எனவே, அனைத்து மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். 

இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் விபரம்
  
நன்றி. விளையாட்டுக்குழு"

 

5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூட்டம் 12 :00 -13: 00 மணிவரை நடைபெறும்.

எதிர்வரும் சனிக்கிழமை 2/3-19 குளிர்கால  விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது .

தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு  (23/2-19) சனிக்கிழமை  13.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ் கலைக்கூடத்தில்  நடைபெறவிருக்கின்றது.

காலம்: 23.02.19 சனிக்கிழமை
நேரம்: மதியம் 13.00 மணி
இடம்: அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம். ( Aurdalslia skole)

 

19.01.19 சனியன்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும்.

எதிர்வரும் சனிக்கிழமை 12.1.19 அன்று பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில், தமிழ்க்கல்விப் போதிப்பில் நாம் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது.   தமிழில் எழுதும்போது,  எமது மாணவர்கள் பொதுவில் சிரமப்படும் எழுத்துப்பிழைகள் பற்றியும்,  இவற்றைத் தவிர்த்துக்கொள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுபற்றியும்   பேசப்படும்

எதிர்வரும் சனிக்கிழமை 05.01.19 புதிய தவணை ஆரம்பமாகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
வழமை போல் 09:30 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும்.

15:00 மணிக்கு எல்லோருக்குமான நத்தார் ஒன்றுகூடல் நடைபெறும்

பாடசாலையின் இறுதி நாள். அன்று மாவீரர் நினைவாக நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்.
 

08.12.2018 அன்று அரையாண்டுப் பரீட்சை நடைபெறும். அன்றைய தினம் அறிவியற்கல்வி, மற்றும் ஆங்கிலம் நடைபெற மாட்டாது .

10 ஆம் வகுப்பு மாணவர்களின் சிற்றுண்டி விற்பனை இடைவேளையின் போது நடைபெறும்.
எல்லோரும் உங்கள் பங்களிப்பைச்  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Go to top
Template by JoomlaShine