நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15/16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.

விரும்பிய சிறார்கள், மாணவர்கள், இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத்திகத்தி: 01.12.18

போட்டிகள் சிறார்பிரிவில் இருந்து உயர்பிரிவுவரை 5 பிரிவுகளாக நடத்தப்படும். ( ஓவியப்போட்டி 6 பிரிவுகளாக நடக்கும்)

கட்டுரை (தமிழ். நோர்வேஜியன் மொழி) 15.12.18

கவிதை (நோர்வேஜியன் மொழி) 15.12.18

ஓவியம் : 15.12.18

இப்போட்டிகளை நடாத்துவதற்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: சுகந்தன் 93240461 ( பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் சார்பில்)

போட்டிகளின் மேலதிக விபரங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் பெற்றோர்களுக்கான கலந்துரையாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.

24.11.18 அன்று பாடசாலை விடுமுறை.
அன்றைய தினம் பெற்றோர்களுக்கான ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்படுகிறது. அது பற்றிய விபரம் விரைவில்…..

மாவீரர் நினைவாக நடைபெற இருக்கும் ஓவியப்போட்டி, உறுப்பெழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றின் நேர அட்டவணை

13.10.2018 அன்று இலையுதிர் கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது. 

பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைமகள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: 14.10.2018 ஞாயிறு
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Skranevatneskole, Sandsliveien 98.

29.09.18 சனியன்று தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான ஒரு சிறு நினைவு கூரலுடன் பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால்  அன்றைய தினம் அனைவரையும் Gymsal இல் 9.30 மணிக்கு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பெற்றோர் கூட்டம் 29.09.18
29.09.2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் பெற்றோர் கூட்ட அறிவித்தல்.

பெற்றோர் கூட்டம்- 7 ஆம் வகுப்பு
மணி : 11-12
இடம் : அலுவலகத்திற்கு அருகாமையில் 

பெற்றோர் கூட்டம்- 9,10, VGS வகுப்பு
மணி: 12 - 13
இடம் : Gymsal

பெற்றோர் கூட்டம் அனைவருக்கும்
மணி: 13 - 14:30
இடம் :Gymsal

22.09.2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் பெற்றோர் கூட்ட அறிவித்தல்.

பெற்றோர் கூட்டம்- 5 ஆம் வகுப்பு 
மணி : 11-12
இடம் : 5 ஆம் வகுப்பறை

பெற்றோர் கூட்டம்- 3 ஆம் வகுப்பு 
மணி: 12 - 13
இடம் : அலுவலகத்திற்கு அடுத்த அறை

பெற்றோர் கூட்டம்- 4 ஆம் வகுப்பு 
மணி: 13 - 14
இடம் : அலுவலகத்திற்கு அடுத்த அறை

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தால் மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளின் பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவீரர் நினைவு பேச்சுப்போட்டி 2018

காலம்: 17.11.2018 சனிக்கிழமை

பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளின் விதிமுறைகள்

25.08.18, மணி 09:30 க்கு புதிய பாடசாலையாண்டு ஆரம்பமாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் "Gymsal " இல் கூடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அன்றைய தினம் பாடசாலை 11:30 மணிக்கு நிறைவுறும்.

வரும் சனிக்கிழமை 16.06.18 அன்று காலை 11- 13 மணிவரை ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கான ஒன்றுகூடல் (Sosial samling) நடைபெறும். அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (Ta med mat Koldtbord)

இல்ல விளையாட்டுப்போட்டிகளுக்கான இரண்டாவது பயிற்சிகள் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப.16 - 17 மணிவரை Oasenbane, Fyllingsdalen இல் நடைபெறும். இதில் அனைத்து இல்ல மாணவர்களையும், தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவர்களது இல்ல பொறுப்பாளர்களிடம் அறிவிக்கவும்.
சுகந்தன்: 93240461 (திலீபன் இல்லம்)
ரமேஷ்: 47607359 (மில்லர் இல்லம்)
கண்ணன்: 90827208 (மாலதி இல்லம்)
Address: Hjalmar Brantings vei 9, 5143 Fyllingsdalen. MAP

வகுப்புகள் ரீதியான ஒன்றுகூடல் 09:30 - 11:00. இன்றைய நாள் இத்துடன் நிறைவுறும்.

1-4 ஆம் வகுப்பு மாணவரக்ள் தம் தம் வகுப்பறைகளில் சந்திக்கவும்.
5-10 ஆம் வகுப்பு மாணவர்கள் Gymsal இல் சந்திக்கவும்.

இல்ல விளையாட்டுப்போட்டிகளுக்கான முதலாவது பயிற்சிகள் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை 11.05.2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை Oasenbane, Fyllingsdalen இல் நடைபெறும். இதில் அனைத்து இல்ல மாணவர்களையும்,  தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Address: Hjalmar Brantings vei 9, 5143 Fyllingsdalen. MAP

நான்காம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பயிற்சிகள் 12.05.2018 சனிக்கிழமை அன்று பாடசாலை நேரத்தில் நடைபெறும்.

Go to top
Template by JoomlaShine