- Details
- அறிவித்தல்
பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்!
- முதற்கட்டமாக தமிழ் வகுப்புகள் மட்டும் மணி 09:30 - 11:45 வரை நடைபெறும் (உயர்தர வகுப்புகளுக்கு தனிப்பட்ட தகவல் கொடுக்கப்படும் .
- ஆசிரியர்கள், பாடசாலையின் பொறுப்பாளர்கள் மற்றும் 4-6 வயது மாணவர்களின் பெற்றறோர்களுக்கு மட்டும் வாகனத் தரிப்பிடத்திற்கு (parkering) அனுமதியுண்டு.
- பாடசாலை வளாகத்தில் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கவும்.
- பெற்றோர்கள் வகுப்பறையினுள்ளேயோ அல்லது பாடசாலையோர கட்டிடத்தினுள்ளேயோ செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது .(விதிவிலக்கு 4, 5 வயது மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரின் அனுமதியுடன் உட்செல்லலாம்.
- மணி 09:30 ற்கு முன்னதாகவே அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்பறையின் முற்பகுதியில் ஆசிரியரைச் சந்தித்து கைகளைச் சுத்தம் செய்த பின்னர் உட்செல்வார்கள்.
- Details
- அறிவித்தல்
இலையுதிர்கால விடுமுறை 10.10.2020
எதிர்வரும் சனிக்கிழமை 10/10-20 இலையுதிர்கால விடுமுறை. அன்று பாடசாலை நடைபெற மாட்டாது.
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 17.09.20
மகிழ்வடைகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை 19/9, தமிழ் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இப்பாடசாலையாண்டை ஆரம்பிப்பதால் அனைத்து பெற்றோர்களின்
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2020) 8, 9, 10 மற்றும் உயர்தர வகுப்புகள் மட்டுமே பாடசாலையில்
நடைபெறும். மற்றைய அனைத்து வகுப்புகளும் Zoom -வழியாகவே நடைபெறும். மாறான அறிவித்தல்கள்
வராத பட்சத்தில் அடுத்த சனிக்கிழமை (26.09.2020) அனைத்து வகுப்புகளும் பாடசாலைக் கட்டடங்களில்
நடைபெறும். தயவுசெய்து அனைவரும் உங்கள் வகுப்புகளின் viber -குழுக்களை தொடர்ந்து பார்வையிடவும்.
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் (19.08.20)
ஆரம்பமாகும் நேரம் வகுப்புகள் ரீதியாக பின்னர் அறியத்தரப்படும்.
மற்றும், பாடசாலைக் கட்டடங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒரு சில நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்த பின்னர், விரைவில் பாடசாலையில் சந்திப்போம் என நம்புகிறோம்.
- Details
- அறிவித்தல்
14/6-20
14/6-20 அன்று இப்பாடசாலை ஆண்டு நிறைவடைகிறது. அனைவரும் அறிந்தது போல இம்முறை இணைவழி மூலமான ஆண்டிறுதித் தேர்வுகளுடன் பாடசாலை ஆண்டு நிறைவடைகிறது. எல்லோரும் ஓர் இனிய பாதுகாப்புடன் கூடிய கோடைகால விடுமுறையைக் கழித்தபின்னர் அடுத்த பாடசாலையாண்டில்ச் சந்திப்போம்.
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 07.05.20
அன்னை பூபதி பேர்கன் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம். தற்போதைய தவிர்க்க முடியாத நிலைமைகளால் எமது கலைக்கூடம் இணையம் மூலமாகவே கல்விச்செயற்பாடுகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே! ஆசிரியர்களின் அபரிதமான பங்களிப்பும், மாணவர்களின் ஆர்வமும் பெற்றோர்களின் அக்கறையும் எமக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. Covid19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் வரும் வாரங்களில்கூட நாம் இணையவழி கல்வியையே தொடர உத்தேசித்துள்ளோம். மாற்றங்கள் இருக்கமிடத்து உங்களுக்கு முன்கூட்டியே அறியத்தரப்படும்.
நன்றி!
- Details
- அறிவித்தல்
14/3 - 11/4 -2020 பாடசாலை மூடப்படுகிறது.
நன்றி!
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
Studieseminar 2020
Studieseminar 2020
TYO Bergen arrangerer Studieseminar
15. Februar kl. 12.00
Gymsalen, Aurdalslia skole (Annai poopathy, Bergen)
- Details
- அறிவித்தல்
25.01.2020
9 ஆம் வகுப்புக்கான பெற்றோர் , மாணவர், ஆசிரியர் பட்டறை.
மணி : 09:30 - 12:00
இடம் : Gymsal
- Details
- அறிவித்தல்
12.01.2020
திட்டமிடப்பட்ட ஒன்றுகூடலுக்கு (12.01.20) மிகவும் குறைந்தளவு ஆட்களே ஆர்வம் காட்டியதால், அந்நிகழ்வு நடைபெறமாட்டாது .