அறிவியல்

அறிவியற் கல்வியும் நோக்கமும்

ஒன்று தொடக்கம் பத்தாம் வகுப்பு வரையிலான எமது பள்ளிச் சிறார்கள் சகல துறைகளிலும் ஆர்வம் காட்டி கல்விபயில வேண்டும் என்பதற்காக இந்த அறிவியற்கல்வி ஆரம்பிக்கப்பட்டது.  அதுமட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு இலகுவான முறையில் தமிழில் விடயங்களை தெளிவு படுத்தல் ஒரு முக்கியமான விடயமாக அமைகிறது. அவ்வவ் வகுப்பிற்கு அமைய நோர்வேயிய பாடசாலையின் பாடத்திட்டங்களையும் உள்வாங்கி அறிவியற் கல்வி பாடம் நடாத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக ஒளி, ஒலி, வளி, நீர், மனிதஉடல், வரலாறு, சமூகவியல், நாளாந்தகணிதம்  என இன்னும் பல விடயங்கள் இதன்கீழ் அடங்குகிறது.  தகுதி பெற்ற பல ஆசிரியர்களும் இந்நாட்டில் பிறந்து வாழும் எமது  இளைஞர்களும் எம் பாடசாலைச்  சிறார்களுக்காக அறிவியற்கல்வியை ஆர்வத்துடன் கற்பித்து வருகிறார்கள்.

எமது பாடசாலையில் அறிவியற் கல்வியின் முக்கிய நோக்கம், ஒரு விடயம் பற்றி முழுமையான தெளிவைப் பெற்றுக் கொள்ளுதலோ,  அல்லது ஒரு நிகழ்வு ஏன், எவ்வாறு, எதற்காக நடைபெறுகிறது என்று கண்டறிவதோ ஆகும்.

பல தரப்பட்ட பொது விடயங்களை செய்முறை ஊடாகவும் விளையாட்டுடன் கூடிய கல்வியின் ஊடாகவும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தல் எமது பாடசாலையில் நாம் அறிவியற் கல்வியில் உபயோகிக்கும் ஒரு முதன்மையான வழிமுறை ஆகும்.

இப்பாட நேரத்தின் போது பல வகைப்பட்ட தொழில்சார் நிபுணர்கள் தங்கள் தொழில்களின் சிறப்புத் தன்மை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைப்பதும் ஒரு முக்கியமான பகுதியாகும். இதனூடாக மாணவர்கள் பல புதுவிடயங்களை அறியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

நேரம் : 12:00 – 13:00 மணி  (கட்டாய  பாடம்)
வகுப்பு : 1 – 10 ஆம் வகுப்பு

Scroll to Top