“ உலகத்தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னை பூபதி கலைக்கூட பேர்கன் வளாகத்தால் வழங்கப்பட்ட நிகழ்ச்சி”

பேச்சுப்போட்டி 2021
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளுக்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3 வயது மழலை 1

4 வயது மழலை 2

5 வயது பாலர் நிலை 

வகுப்பு 1

வகுப்பு 2

வகுப்பு 3

வகுப்பு 4

வகுப்பு 5

வகுப்பு 6

வகுப்பு 7

 

பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2021 விதிமுறைகள்
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை நீங்கள் இங்கே பார்வையிடலாம் .
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2021 விதிமுறைகள்

அன்புடையீர், கடந்த 16 மாதங்களாக நடைமுறையிலிருந்த நாடளாவிய குரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.  எனவே, அன்னை பூபதி கலைக்கூடமும் எமது வழமையான கல்வி நடவடிக்கைகளை மீண்டும் முழுமையாக நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, எதிர்வரும் 23.10.21 தொடக்கம், அறிவியல்கல்வி வகுப்புகளும் பகல் 12 முதல் 13 மணிவரை வாராவாரம் சனிக்கிழமைகளில் மீண்டும் நடாத்தவுள்ளோம்.

பெற்றோர்களினால் நடாத்தப்படும் உணவுச்சாலையும் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் நடாத்தப்படவுள்ளது என்பதையும மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!

பெற்றோர்களை பாடசாலை நடவடிக்கைகளில்  முன்பு போல் நேரடியாக சமூகமளித்து, கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி!😊

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

 

அனைவர்க்கும் அன்பு வணக்கம்!

கோடைகால விடுமுறை உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும என நம்புகிறோம். புதிய கல்வியாண்டில் புதிய பாட நூல்களுடன், பாடத்திட்டங்களுடன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் நேரில் காண மிக ஆவலாயுள்ளோம்.

வருகின்ற சனிக்கிழமை 21.8.21, காலை 10 மணிக்கு எமது அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் தனது கல்வியல் நடவடிக்கைகளை, நேரடியாக Aurdalslia பாடசாலையில் ஆரம்பிக்கிறது என்பதை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!

ஆசிரியர் கூட்டம் காரணமாக, பாடசாலை இந்த சனிக்கிழமை 11.30 மணிக்கு நிறைவடையும்!

Videregående skole மாணவர்களையும் காலை 10 மணிக்கே சமூகமளிக்குமாறு வேண்டுகிறோம்.

மாணவர்கள் தமது தமிழ் பாடநூல்களை வாங்குவதற்கு ஆயத்தமாக வருமாறு பெற்றோரை வேண்டிக்கொள்கிறோம்!

குரோனா பரவுகைக்கான ஆபத்தை நினவில் கொண்டு, அதற்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்!

நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

அன்புடையீர், வணக்கம்!
zoom வழி நடைபெறும் அன்னை பூபதி கல்வி நடவடிக்கைகள் நேரடியாக பாடசாலையில் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வி நம்மவரில் பலருக்கு உள்ளது. குரோனா சூழ்நிலை பேர்கன் நகரில் ஓரளவுக்கு சீராக இருப்பதால், எதிர்வரும் vinterferieவின்பின் பாடசாலையை ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் நாம் உள்ளோம்.  ஆனாலும், இன்றைய சிக்கலான Oslo குரோனா சூழ்நிலை Bergenஇலும் வருமிடத்து எமது முடிவில் மாற்றம் ஏற்படலாம். எப்படியிருப்பினும், நேரடியாக பாடசாலை ஆரம்பித்தல் சம்பந்தமான மேலதிக விபரங்களை மாசிமாத நடுப்பகுதியில் தங்களுக்கு அறியத்தருகிறோம். அதுவரை அனைவரும் கவனமாயிருந்து, நலம் பேணுவோம்!
நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

குரோனா சூழ்நிலை கடந்த சில நாட்களாய் மோசமடைந்திருப்பதால், நாம் வரும் வாரங்களில் தொடர்ந்து zoomஇலேயே வகுப்புகளை நடாத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் 8ந்திகதி தொடக்கம் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும்.

நன்றி!

அனைவர்க்கும் அன்பு வணக்கம்!

கடந்த சில நாட்களாக பேர்கன் நகரில் Covid 19 பரவுகை அதிகமாகியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அகில நோர்வே ரீதியிலும் நோய் பரவுகை அதிகரித்துவருவதால், அரசுமட்டத்திலும், பேர்கன் நகரசபைமட்டத்திலும் இப்பரவுகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக, நாமும் இந்த சனிதொடக்கம் (7-11-20) அடுத்துவரும்வாரங்களில் அன்னை பூபதி கல்விக்கூடத்தின் கல்வி நடவடிக்கைகளை zoom தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.

வகுப்பு ஆசிரியர்கள் viber குழுக்களூடாக உங்களுடன் தொடர்பு கொண்டு, நேரவிபரங்களைஅறியத் தருவார்கள்.

அத்துடன், நிலைமை கருதி ஓவிய, உறுப்பெழுத்து, பேச்சுப் போட்டிகளையும் அடுத்த வருடத்திற்கு பிற்போட்டுள்ளோம்.  தயவு செய்து எல்லோரும் அரச சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, குரோனா நோய்ப்பரவுகையைக் கட்டப்படுத்துவதில் எம் பங்களிப்பைச் செவ்வனே செய்வோம்.

நலம் காக்க! நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
04-11-20

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை நீங்கள் இங்கே பார்வையிடலாம் .
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2020 விதிமுறைகள்

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளுக்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் பேச்சுப்போட்டி 2020

பெற்றோர்களுக்கு வணக்கம்!

நாங்கள் எல்லோரும் அறிகின்றபடி பேர்கனிலும் மற்றைய இடங்களிலும் தொற்று கூடிக்கொண்டே செல்கிறது. அதனால் நாம் இன்னும் அவதானமாக இருப்போம்.

பாடசாலையில் ஆசிரியர்கள்/ பொறுப்பாளர்கள் 2 மீற்றர் இடைவெளியைப் பேணும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் 2  மீற்றர் இடைவெளியைத் தொடர்ந்து பேணுங்கள்.

இயலுமானவரை பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசிப்பதைத்  தவிர்க்கவும்.

பாடசாலை முடிந்தவுடன் நீங்கள் பிள்ளைகளைக் கூட்டவரும்போது, வாகனத் தரிப்பிடத்தில் சில சிரமங்கள் இருப்பதை நாம் அறிவோம்.  இவ்விடத்தில் எல்லோரும் ஒரு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, karantene/ isolering விதிமுறைகளைச் சரியான முறையில் பேணும்படியும் நினைவூட்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, ஏற்கனவே அறிவித்திருந்த " பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்" என்ற தகவலைப் பார்வையிடவும்.

நன்றி!
சுகந்தன் (அன்னை பூபதி, பேர்கன்)

  •  முதற்கட்டமாக தமிழ் வகுப்புகள் மட்டும் மணி 09:30 - 11:45 வரை நடைபெறும் (உயர்தர வகுப்புகளுக்கு தனிப்பட்ட தகவல் கொடுக்கப்படும் .

  •  ஆசிரியர்கள், பாடசாலையின் பொறுப்பாளர்கள் மற்றும் 4-6 வயது மாணவர்களின் பெற்றறோர்களுக்கு மட்டும் வாகனத் தரிப்பிடத்திற்கு (parkering) அனுமதியுண்டு.

  •  பாடசாலை வளாகத்தில் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கவும்.

  •  பெற்றோர்கள்  வகுப்பறையினுள்ளேயோ அல்லது பாடசாலையோர கட்டிடத்தினுள்ளேயோ  செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது .(விதிவிலக்கு 4, 5 வயது மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரின் அனுமதியுடன் உட்செல்லலாம்.

  • மணி 09:30 ற்கு முன்னதாகவே அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்பறையின் முற்பகுதியில் ஆசிரியரைச் சந்தித்து கைகளைச் சுத்தம் செய்த பின்னர் உட்செல்வார்கள்.

மேலும் வாசிக்க 

எதிர்வரும் சனிக்கிழமை 10/10-20 இலையுதிர்கால விடுமுறை. அன்று பாடசாலை நடைபெற மாட்டாது. 

மீண்டும் Aurdalslia பாடசாலையில்  அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தொழிற்பாட்டை ஆரம்பிப்பதையிட்டு
மகிழ்வடைகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை  19/9, தமிழ் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
ஓர் இக்கட்டான  சூழ்நிலையில் நாம்  இப்பாடசாலையாண்டை  ஆரம்பிப்பதால்  அனைத்து  பெற்றோர்களின்
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2020) 8, 9, 10 மற்றும் உயர்தர வகுப்புகள் மட்டுமே பாடசாலையில்
நடைபெறும். மற்றைய  அனைத்து  வகுப்புகளும் Zoom -வழியாகவே  நடைபெறும். மாறான அறிவித்தல்கள்
வராத பட்சத்தில்  அடுத்த சனிக்கிழமை (26.09.2020) அனைத்து வகுப்புகளும் பாடசாலைக்  கட்டடங்களில்
நடைபெறும். தயவுசெய்து அனைவரும்  உங்கள் வகுப்புகளின் viber -குழுக்களை தொடர்ந்து பார்வையிடவும். 
 
புதிய பாடசாலையாண்டு இணையவழி மூலமாக 29.08.20  சனிக்கிழமை ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம்.
ஆரம்பமாகும் நேரம் வகுப்புகள் ரீதியாக பின்னர் அறியத்தரப்படும்.
மற்றும், பாடசாலைக் கட்டடங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒரு சில நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்த பின்னர், விரைவில் பாடசாலையில் சந்திப்போம் என நம்புகிறோம். 
 

14/6-20 அன்று  இப்பாடசாலை ஆண்டு நிறைவடைகிறது. அனைவரும் அறிந்தது போல இம்முறை  இணைவழி மூலமான ஆண்டிறுதித் தேர்வுகளுடன் பாடசாலை ஆண்டு நிறைவடைகிறது. எல்லோரும் ஓர் இனிய பாதுகாப்புடன் கூடிய கோடைகால விடுமுறையைக் கழித்தபின்னர் அடுத்த பாடசாலையாண்டில்ச் சந்திப்போம்.

அன்னை பூபதி பேர்கன் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம். தற்போதைய தவிர்க்க முடியாத நிலைமைகளால் எமது கலைக்கூடம் இணையம் மூலமாகவே கல்விச்செயற்பாடுகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே! ஆசிரியர்களின் அபரிதமான பங்களிப்பும், மாணவர்களின் ஆர்வமும் பெற்றோர்களின் அக்கறையும் எமக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. Covid19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் வரும் வாரங்களில்கூட நாம் இணையவழி கல்வியையே தொடர உத்தேசித்துள்ளோம். மாற்றங்கள் இருக்கமிடத்து உங்களுக்கு முன்கூட்டியே அறியத்தரப்படும்.

நன்றி!

Go to top
Template by JoomlaShine