அன்னை பூபதி பேர்கன் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம். தற்போதைய தவிர்க்க முடியாத நிலைமைகளால் எமது கலைக்கூடம் இணையம் மூலமாகவே கல்விச்செயற்பாடுகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே! ஆசிரியர்களின் அபரிதமான பங்களிப்பும், மாணவர்களின் ஆர்வமும் பெற்றோர்களின் அக்கறையும் எமக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. Covid19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் வரும் வாரங்களில்கூட நாம் இணையவழி கல்வியையே தொடர உத்தேசித்துள்ளோம். மாற்றங்கள் இருக்கமிடத்து உங்களுக்கு முன்கூட்டியே அறியத்தரப்படும்.

நன்றி!