- Details
- அறிவித்தல்
இல்ல விளையாட்டுப் போட்டிகள் 2018
இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டுப்போட்டி 17.06.2018 ஞாயிறு அன்று Leikvang idrettsbane, Breistein மைதானத்தில் இம்முறை நடைபெறும்.
Address: Leikvangvegen 33, 5111 Breistein MAP
2014 (3 வயது) ஓட்டம் 20 மீற்றர், வினோத உடைப் போட்டி.
2013 (4 வயது) ஓட்டம் 20 மீற்றர், பழம் பொறுக்குதல், வினோத உடைப் போட்டி.
(இல்லஆசிரியர்கள் பொறுப்பு 5வயது தொடக்கம் 2ம் வகுப்பு வரை)
5 வயது (2012) ஆண்கள் :ஓட்டம் 30 மீற்றர், பழம் பொறுக்குதல் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல் , பந்து அடித்தல்.
பெண்கள்: ஓட்டம் 30 மீற்றர், பழம் பொறுக்குதல் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல் பந்து எறிதல்.
1ஆம் வகுப்பு (2011) ஆண்கள் : ஓட்டம் 50 மீற்றர், தடை ஓட்டம் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல், இலக்கை நோக்கி பந்தைக் காலால் அடித்தல்.
பெண்கள்: ஓட்டம் 50 மீற்றர், தடை ஓட்டம் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல் பந்து எறிதல்.
2ஆம் வகுப்பு (2010) ஆண்கள் : ஓட்டம் 75 மீற்றர், தடை ஓட்டம் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல் 2 போத்தல் ஒரே தரத்தில்), இலக்கை நோக்கி பந்தைக் காலால் அடித்தல்.
பெண்கள்: ஓட்டம் 75 மீற்றர், தடை ஓட்டம் (2 கரட்டுகளை வாளிக்குள் இடல் 2 போத்தல் ஒரே தரத்தில்) பந்து எறிதல்.
- Details
- அறிவித்தல்
வெள்ளிக்கிழமை , 4/5-18, மணி 17:00 தொடக்கம் 6-10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளும், சனிக்கிழமை 5/5-18 தமிழ் பாட நேரத்தின் போது 1-5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமை , 21.04.18, அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகளுடன் பாடசாலை ஆரம்பமாகும். அனைவரையும் மணி 09:30 க்கு " gymsal " இல் கூடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- Details
- அறிவித்தல்
தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதி (24/2-18) 13.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ் கலைக்கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.
- Details
- அறிவித்தல்
12 மணி முதல் 13 மணிவரையிலான அறிவியல் பாடநேரத்தின்போது 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கல்வியுடன் சேர்ந்த விடயங்களே கற்பிக்கப்படும். இதில் விளையாட்டுடன் கூடிய வகையிலும் தமிழ்க்கல்வி கற்கும் முறைகள் கையாளப்படும். ஆரம்பக்கல்வி மாணவர்களின் தமிழ் மொழித்திறனை அதிகரிக்க வைக்கும் ஒரு முயற்சியாக இவ்வருட அரையாண்டிற்கு இச்செயல் திட்டம் நடாத்தப்படும்.
- Details
- அறிவித்தல்
சனிக்கிழமை, 20/01-18 தமிழ் வகுப்புக்களைத் தொடர்ந்து
11:00 - 13:00 வரை பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும்.
அன்று அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் நடைபெற மாட்டாது.
- Details
- அறிவித்தல்
- Details
- அறிவித்தல்
16/12 பாடசாலையின் இறுதி நாளாகவும்,
17/12 பாடசாலையின் நத்தார் ஒன்றுகூடல் நாளாகவும்
அமையும் என்பதை அறியத்தருகின்றோம். ஒன்றுகூடல்
15:00 மணிக்கு ஆரம்பமாகும். ( 16/12 அறிவியல், ஆங்கில மற்றும் நடன வகுப்புக்கள் நடைபெற மாட்டாது .
எல்லோருக்கும் இனிய நத்தார் விடுமுறை.
- Details
- அறிவித்தல்
எதிர் வரும் சனிக்கிழமை , 09/12, தமிழ் அரையாண்டுப் பரீட்சை 1 -10 ஆம் வகுப்பு வரை நடைபெறும். அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறமாட்டாது . நடன வகுப்புக்கள் நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
பெற்றோர், மாணவர்க்கான அறிவித்தல்!!
உறுப்பெழுத்து, ஓவியப்போட்டி
மாவீரர் நினைவாக நடைபெறும் உறுப்பெழுத்து, ஓவியப்போட்டி சனிக்கிழமை 11.11.2017 அன்று 11.30 மணிக்கு நடைபெறும்.
பேச்சுப்போட்டி!!
மாவீரர் நினைவாக நடைபெறும் பேச்சுப்போட்டி சனிக்கிழமை 18.11.2017 அன்று நடைபெறும்.
வயதுப்பிரிவு: 3,4,5 வயது
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 10.00 மணி
வயதுப்பிரிவு: 1 , 2 ம் வகுப்பு
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 10.00 மணி
வயதுப்பிரிவு: 3 , 4 ம் வகுப்பு
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 11.30 மணி
வயதுப்பிரிவு: 5 , 6, 7 ம் வகுப்பு
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 13.00 மணி
முன்னிலைப்படுத்தல்
நேரம்: 15.00 - 17.00 மணி