மாணவர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளிற்கு சமூகமளிக்க வேண்டும். தமிழ் வகுப்புகளிற்கு 09.25 மணிக்கே மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மாணவரும், ஆசிரியர்களும், பெற்றோரும் வகுப்புகளுக்குள்ளும், Gymsal உக்குள்ளும் Aurdalslia பாடசாலையின் விதிகளுக்கமைய, உள்ளரங்க பாதணிகளே (innesko) அணிய வேண்டும். இல்லாவிடின் பாதணிகளைக் கழற்றி வகுப்பறைகளுக்கு வெளியில் வைத்துவிட்டுத்தான் அறைகளுக்குள் நுழைய முடியும். இந்த விடயத்தில் எந்த வித நெகிழ்வும் காட்டப்படாது.
வகுப்பறைகளில் உள்ள எந்தப் பொருட்களையும் அப்புறப்படுத்தவோ, நகர்த்தவோ மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. வகுப்புகள் முடிந்தவுடன் தாம் உபயோகித்த இருக்கை, தளபாடங்கள் அனைத்தையும் வகுப்பு ஆரம்பத்தில் இருந்த விதத்திலே மாணவர்கள் வைக்க வேண்டும்.
வகுப்புறைகளுக்குள் ஆசிரியர் இல்லாமல் 10ஆம் வகுப்பு வரை எந்த மாணவரும் தனித்திருக்க முடியாது. நிர்வாகத்தின் முன்கூட்டிய அனுமதி இல்லாமல் எந்த வகுப்புறையும் யாராலும் பாவிக்கப்பட முடியாது.
குப்பைகள் சரியான பகுத்தலுக்கு (Kilde sortering) அமையவே, பொருத்தமான குப்பை வாளிகளுக்குள்ளேயே எறியப்பட வேண்டும். உணவு எச்சங்கள் சிதறப்படாமல், வகுப்பு முடியும் தருவாயில் அகற்றப்பட வேண்டும்.
7ஆம் வகுப்பு வரையான மாணவர்க்கு பாடசாலை நேரத்தில் (09.30 மணி தொடக்கம் 13.00 மணி வரை) பாடசாலை வெளிவாசலுக்கு வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல், மாணவர் பாடசாலை வெளிவாசலுக்கு வெளியே சென்றால், அதற்கான பொறுப்பு பெற்றோரையே சாரும். வகுப்புகள் முடிந்தவுடன் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பொறுப்பெடுக்க வேண்டும்.
பாடசாலை தவிர்ந்த நேரங்களில் வகுப்பறைகளுக்கு வெளியே நடைபெறும் ஒழுங்கீனம், சச்சரவுகளிற்கு கலைக்கூடம் பொறுப்பேற்காது. பாடங்கள் முடிவடைந்து மாணவர் வீடு திரும்பும் நேரம் குறித்து பெற்றோர் அவதானிக்க வேண்டும்.
இனிப்புக்கள், விளையாட்டுப் பொருட்கள் பாடசலைக்குள், வகுப்பு நேரங்களில் கொண்டு வரக்கூடாது.
பிள்ளைகள் இரண்டு வகுப்புகளுக்கு மேல் தொடர்ந்து சமூகம் தர முடியாவிட்டால், அல்லது பாடசாலையில் இருந்து நீங்கினால் அதுபற்றி பதிவாளருக்கு அறியத்தரவேண்டும்.
நீண்ட விடுமுறையில் நிற்கும் மாணவர்கள் அவசியம் எழுத்து மூலம் முன்கூட்டியே விடுமுறைக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
கல்வி பயிலும் பாடங்களில் மாற்றமேதும் செய்யின் இரண்டு மாதங்களுக்கு முன்னரேயே எழுத்து மூலம் அறியத்தரல் வேண்டும்.
பிள்ளை புதிதாய் ஒரு வகுப்பில் இணையும் போதோ அல்லது நீங்கும் போதோ பொறுப்பாளருக்கு அறியத்தரப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடம் தொடர்பாக பெற்றோர்களும் இயன்றவரை அக்கறை செலுத்த வேண்டும்.
முகவரி, தொலைபேசி இலக்க மாற்றங்களை உடன் பதிவாளருக்கு அறியத்தரவும்.
பெற்றோர் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். பிரத்தியேக வகுப்பறைச் சந்திப்பிற்கும் பெற்றோர் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் தரம், நிலைபற்றி கலந்துரையாட வகுப்பாசிரியருடன் தனியான சந்திப்பை ஏற்படுத்தலாம்.
பிள்ளைகளிற்கு பாடசாலை நேரத்தில் உணவுப்பொதி, குளிர்பானம் தேவையா என அறிந்து ஆவன செய்யும் பொறுப்பு பெற்றோருடையதாகும்.
பாடசாலை விழா நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும், இல்ல விளையாட்டுப் போட்டியிலும் அனைத்து மாணவர்களும் பங்கு பெறல் வேண்டும். ஏதாவது தவிர்க்கமுடியாத காரணங்களினால் இல்ல விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற முடியாவிடின், முன்கூட்டியே அனுமதிபெற்றிருத்தல் வேண்டும். விளையாட்டுப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் வைகாசி மாதம் அறியத்தரப்படும்.
வருடாந்த அங்கத்துவப் பணம் தை மாதத்திற்குள் செலுத்தப்படவேண்டும்.
மாதங்களுக்;குரிய கட்டணங்கள் அந்தந்த மாதமே செலுத்தப்படல் வேண்டும். கட்டணங்களை வங்கி இலக்கத்துக்கோ அல்லது அலுவலகத்தில் பதிவாளரிடம் நேரடியாகவோ செலுத்தலாம்.