பாடசாலை கீதம்

வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே

வாழிய ©பதி தமிழ்க்கலைக்கூடம்
வையகம் போற்றிட வளர்மதி எனவே (வாழிய)

ஈழத்தின் வெளியே இலங்கிடும் கலையகம்
இளையவர் நாமும் ஏற்றிடும் அறிவகம்
அன்பும் அறனும் பண்பும் பயில்வோம் – நாளும்
நாம் தமிழரென மார்தட்டிச் சொல்வோம் (வாழிய)

புல்நுனி மீது வெண்பனி போர்த்தும்
நடுநிசிச் சூரியன் நாணிச் சிவக்கும்
நேரிய நோர்வே நன்நிலந் தன்னில் – எம்
முத்தமிழ்க் கூடம் முகிழ்ந்தது வாழி (வாழிய)

பாலகர் வதனம் பரவசம் காட்டும்
பாருக்குள் எம் இனம் பார் என்று அழைக்கும்
தாய்மொழி தமிழ் மொழி தழைக்கும் – இங்கு
தளிர்விட்ட கலைகள் சாதனை படைக்கும்

 

 

Scroll to Top