தமிழ்

ஒவ்வொரு வளர்ச்சிக்கும் மொழி இன்றியமையாதது. மொழியின் உதவியின்றி எதுவும் செய்ய முடியாது.
மனிதன் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப்பூர்த்தி செய்யவும் மொழிதான் காலத்திற்கு காலம் மனிதன் மாறிக் கொண்டு இருந்தாலும் உலகில் எத்தனை மொழிகள் தோன்றினாலும் ஒரு மனிதனுக்கு தாய்மொழி அறிவு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் தாய்மொழிக்கல்வி தமிழை நாம் நிச்சயம் கற்றே தீர வேண்டும்.
தமிழ் அறிவுள்ள குழந்தை நல்ல மன வளர்ச்சியுள்ளதாகவும், ஆளுமை விருத்தி உள்ளதாகவும் வளர்கின்றது.

நமது பாரம்பரிய கலைகளைக் கற்கும் நம் சிறார்களுக்கு தாய் மொழி அறிவு மிக மிக முக்கியம்.

தாய்மொழியாம் இனிய தமிழ்மொழியில் பல பொன்மொழிகள் உண்டு.

முன்னோர் தந்த தமிழ்
மூத்தகுடியின் தமிழ்
எங்கள் அன்னைத்தமிழை
செம்மை புதுமை சீர்முறை கண்ட
சிதம்பரநாதர் செல்வர் நாவலர்
சோமசுந்தரம் சுப்பிரமணியம்
பன்மொழிப்புலவர் பாரதி என்று
முத்தமிழ் – தாய்த்தமிழ்
தமிழ்ச்செல்வம் தேன்தமிழ்
தெவிட்டாத நல்லமுது
தங்கத் தமிழ்ச் செல்வம்
பொருள் நிரம்பிய பொற்செல்வம்
செந்தமிழ் வண்ணத்தமிழ்
பண்டைத்தமிழ் சுந்தரத்தமிழ்

என்று பலவேறு பெயர் கொண்ட தமிழை நாம் புலம்பெயர் வாழ்விலும் பெருமையுடன் கற்க வேண்டும்.

 

Scroll to Top