அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே,
உங்கள் அனைவர்க்கும் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். அத்துடன், எமது பரத நாட்டிய வகுப்புகளும் மீண்டும் ஆரம்பமாகின்றன என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம். சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ள நடனவகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களை திருமதி திவ்யா யூலியஸ் (00 47 968 47 551) அவர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்